வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 97,490 ஆக உயர்வு.
வறட்சியான காலநிலைக்குள் 8 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் 97,490 பேர் பாதிக்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, திருகோணமலை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 30,128 ஆகும்.
வறட்சியான காலநிலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகி உள்ளது. அந்த மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வறட்சியான காலநிலைக்கு ஏற்ற வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment