பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் ட்ரக்குகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் (எல்ஓசி) வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க தலையிடுவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கவலைகளுக்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.
சம்பந்தப்பட்ட கடன் கடிதங்களுக்கு அரசாங்க உத்தரவாதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Comments powered by CComment