விளையாட்டு துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு அமைய அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பிற்காக ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது மேலும் மூன்று பேர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கு மேலதிகமாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment