தி இந்து ஆங்கில நாளிதழின் சென்னை அலுவலகப் பொழுபோக்குச் செய்தி சேகரிப்புத் துறையில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த 29 வயது பிரதீப் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது மரணம் பத்திரிகை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014 ல் தன் 22 ம் வயதில் பத்திரிகை உலகில் பணியாற்றத் தொடங்கினார் பிரதீப். இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கில், டைம்ஸ் ஆப் இந்தியா, ஆகிய பத்திரிகைகளில் சினிமா செய்தியாளராக பணியாற்றி விட்டு தற்போது தி இந்து ஆங்கிலம் பத்திரிகையில் பணியாற்றிவந்தார்.
சினிமா செய்திகள் தவிர சென்னை மாநகராட்சி செய்திகளை கவனிக்கும் கூடுதல் பொறுப்பும் அவர் வசம் இருந்தது. சென்னையில் பாதாள சாக்கடையில் ஏற்படும் கழிவுகளை மனிதர்களே நேரடியாக இறங்கி அள்ளும் அவலம், அதானால் விளையும் மரணங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுட்டு விழுப்புணர்வு ஏற்படுத்தியதிலும் பெரிதும் அக்கறை காட்டியவர். பிரதீபுக்கு விரைவில் திருமணம் செய்விக்க அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுத்து வந்தனர்.
Comments powered by CComment