டெல்லி கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது அடுத்தடுத்த கடைகளைக்கும் பரவியதால் பதற்றம் நிலவியது.
டெல்லியில் கொரோனா ஊரடங்குகள் நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிவருகிறது. இதனால் கடந்த வாரம் முதல் டெல்லியில் உள்ள அனைத்து கடைகளும் விதிமுறைகளின் கீழ் திறக்கப்பட்டு இயங்கிவருகிறது.
இந்நிலையில் இன்று காலை டெல்லி லாஜ்பத் நகர் கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. எனினும் அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments powered by CComment