மும்பை மாநகரத்திற்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் இந்தியாவின் மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது.
தொடர்ந்து அங்கு கனமழை பெய்துவருவதால் பல்வேறு இடங்களில்; பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலநிலை காரணமாக மும்பையில் அதி தீவிர மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட நிர்வாகங்கள் ஏற்படும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment