தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 5ந் திகதியுடன் காலவதியாகிறது.
அதன் பின்னரும் ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பதா? மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான ஆலோசனை கூட்டமொன்றினை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்துகிறார்.
இன்று காலை நடைபெறும் இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பெறும் முடிவுகள் தொடர்பில் நாளை புதிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments powered by CComment