அமேசான் ஆன்லைன் தளத்தில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த ஒருவருக்கு பாஸ்போட்டுடன் கவர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருகி வரும் விஞ்ஞான காலத்தில் மக்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தபடியே தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். இதில் பெரும்பாலானோருக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருள் சரியாக கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலருக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருளை விடுத்து வோறொரு வந்துவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கேரளாவில் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்த மிதுன் பாபு என்பவர், இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ’பாஸ்போர்ட் கவர்’ ஒன்றை ஆன்லைன் அமேசான் இணையதளத்தில் ஆர்டர் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 1-ம் திகதி மிதுன் பாபுவுக்கு அமோசனில் இருந்து ஆர்டர் செய்த ‘பாஸ்போர்ட் கவர்’ வந்துள்ளது ஆனால் அந்த கவரை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு உண்மையான பாஸ்போர்ட் இருப்பதை பார்த்து மிதுன் பாபு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக அமேசான் அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவில் தொடர்புகொண்ட கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையத்து மிதுன் பாபு அந்த பாஸ்போர்ட்டை பிரித்து பார்த்தபோது, அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பது தெரியவந்தது. உடனடியாக பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருந்த முகவரியை தொடர்பு கொண்ட மிதுன் பாஸ்போர்ட் விவகாரம் குறித்து கூறியுள்ளார்.
அப்போது அது தனது பாஸ்போர்ட் தான் என்பதை உறுதி செய்த முகமது சலீம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாக்கியதாகவும், அந்த கவர் தனக்கு பிடிக்கவில்லை என்று ரிட்டர்ன் செய்யும்போது பாஸ்போர்ட்டை எடுக்க மறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் பாஸ்போர்ட்டுடன் வந்த இந்த கவரை ஆய்வு செய்யாத அமேசான் நிறுவனத்தினர் அதை அப்படியே மிதுன்பாபுவுக்கு அனுப்பியுள்ளனர்.
Comments powered by CComment