தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,
பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவது, விக்ரம் படத்தில் நடித்து வருவது என பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட தொடங்கியுள்ளார். இதற்காக 'ஹவுஸ் ஆப் கதர்' பெயரில் பிரத்யேக ஆடை பிராண்டை உருவாக்கியுள்ளார். காதி ஆடைகளை மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய செய்வற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய கமலுக்கு லேசான இருமல் இருந்து வந்தது. இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இதை பதிவு செய்து பொதுவெளிக்கு அறிவித்துள்ளார் அவர் தன்னுடைய பதிவில்:
"அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. அதனால் பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவதில்லை. மேலும் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க பாதுகாப்பின்றி கூடினார்கள் இதனால் பல மாநகரங்களில் கொரோனா பெற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது இதையொட்டி மூன்றாம் அலை தமிழகத்தை தாக்கத் தொடங்கி இருக்கிறதா என்பதை அரசாங்கம் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
Comments powered by CComment