கொரோனா பரிசோதனை கட்டணத்தை மீண்டும் குறைத்து
விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களில் தென் ஆப்பிரிக்கா, லண்டன், போஸ்ட்வானா, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும், மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ரேபிட் பிசிஆர் (தூரித) பரிசோதனைக்கு ரூ.3,400, ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு ரூ.700 கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ரேபிட் பிசிஆர் (தூரித) பரிசோதனை ரூ3,400லிருந்து 500ரூபாய் குறைத்து ரூ.2,900, ஆர்டிபிசிஆர் பரிசோதனை க்கு 700 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் ரூபாய்100 குறைத்து ரூ.600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் இந்த நடைமுறை விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Comments powered by CComment