நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, வரும் 19 ஆம் திகதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் திகதி விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு வரும் 18 ஆம் திகதியும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, வரும் 19 ஆம் திகதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
Comments powered by CComment