தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
வார்டு வாரியாக வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிய வரும்.
மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் திமுக கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
Comments powered by CComment