சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பெரும் தொற்று சில நாட்களாக வேகமாக பரவிவருகிறது.
அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டாக நோய் தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 153 புதிய நோய் தொற்று பதிவாகி வரக்கூடிய சூழ்நிலையில் உலக அளவில் இந்த நோய் தொற்று எண்ணிக்கை 5.87 லட்சமாக இருக்கிறது.
220 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பெரும் தொற்றின் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
மேலும், கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது, பாசிட்டிவ் என்று வரக்கூடிய மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் பண்டிகைகள் வர இருப்பதால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும்.
சர்வதேச சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை, இங்கு வருகை தரக்கூடிய அனைத்து பயணிகளையும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் துவங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments powered by CComment