தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், முப்படை மற்றும் டெல்லி போலீஸின் அணி வணக்கத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முப்படைகளில் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க தேசிய வணக்கம் செலுத்தினார். தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மீது மலர் தூவப்பட்டது.

Comments powered by CComment