உச்சநீதிமன்ற உத்தரவால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு உத்தரவு ரத்து
இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் அரசு வழங்கிய வீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டன. பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். அதில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ராகுல் காந்தி உச்சநீதிமன்றம் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அப்போது, உச்சநீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதனால் மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
Comments powered by CComment