திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் பதவி ஏற்பு
இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
மேலும், பாபுபாய் ஜெசங்பாய் தேசாய் (குஜராத்), கேஸ்ரீதேவ்சிங் திக்விஜய் சங் ஜாலா (குஜராத்), நாகேந்த்ரா ராய் (மேற்கு வங்காளம்) ஆகியோர் பா.ஜனதா மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஓ'பிரைன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பராய்க், சமிருல் இஸ்லாம் ஆகிய ஐந்து பேரும் மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு மாநிலங்களவை சேர்மன் ஜெக்தீப் தன்கார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜெய்சங்கர் ஆங்கிலத்திலும், ஓ'பிரைன், சென், ராய் ஆகியோர் பெங்கால் மொழியிலும் பதவி ஏற்றனர்.
Comments powered by CComment