ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.
இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment