மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Comments powered by CComment