பிலிப்பைன்ஸின் சுலு மாகாணாத்தின் ஜோலோ தீவுப் பகுதியில் தரையிறங்க முயன்ற போது சி-130 ரக இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனை உறுதிப் படுத்திய பிலிப்பைன்ஸ் இராணுவம் மொத்தம் 92 பயணிகள் இதில் இருந்ததாகவும், இதுவரை 17 பேரின் உயிரிழப்புக்கள் உறுதி செய்யப் பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே 15 பேர் வரை உயிருடன் மீட்கப் பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களைக் காப்பாற்றும் முயற்சி மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இதேவேளை அண்மையில் ஜப்பானின் சுற்றுலா நகரமான அட்டாமி நகரின் மலைப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பல கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் இடிபாடுகளால் பிரதான சாலையின் ஒரு பகுதியும் மூடப் பட்டது. இப்பகுதியில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகளில் அவசர சேவைகளும், இராணுவமும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி சிலர் இறந்திருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ள போதும் இன்னமும் எண்ணிக்கை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment