உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பாதித்துவரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.85 கோடியை தாண்டியுள்ளது.
உலகளவில் இப்பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19.53 கோடியை தாண்டியுள்ளது.
கடந்தாண்டு முதல் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21.85 கோடியை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 21,85,40,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 19,53,65,126 பேர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 45 லட்சத்து 33 ஆயிரத்து 609 பேர் கொரோனா தாக்குதால் உயிரிழந்துள்ளனர்.
Comments powered by CComment