இந்தோனேசியா சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கைதிகள் உள்பட 41பேர் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியா பாண்டன் மாகாணத்தில் உள்ள தங்கெராங்க எனும் சிறைச்சாலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதன்போது தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் 122 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 41 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகவலிருந்து விரைந்திருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் பலமணிநேரம் போராடியதாகவும் படுகாயமடைந்த நிலையில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சிறைச்சாலை தீவிபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments powered by CComment