ரஷ்யா நாட்டில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நோக்கி துப்பாக்கியை பிரயோகித்துள்ளார். தாக்குதலின் போது அங்கிருந்தவர்கள் கட்டிட ஜன்னல்கள் வழி தப்பி ஓட முயற்சித்துள்ளனர். மேலும் சிலர் கட்டிட வகுப்பறைகளுக்குள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டுள்ளனர். எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்தியவரை போலீசார் காயப்படுத்தி கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments powered by CComment