அமெரிக்காவில் ஜோப்ளின் நகருக்கு அருகே 147 பயணிகளுடன் சென்ற அம்ட்ராக் எனும் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் சனிக்கிழமை மாலை எம்பயர் பில்டர் ரயில் சுமார் 147 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் புறப்பட்டது. இந்நிலையில் ஜோப்ளின் நகருக்கு அருகில் இந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments powered by CComment