ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய டிரக் வாகனம் வெடித்து சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த வாகனம் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் குறித்த வெடிப்பு சம்பவம் அந் நகரம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தாக்குதலா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என சர்வதேக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Comments powered by CComment