நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகின்றன.
Comments powered by CComment