சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) முதன்முறையாக நடத்திய ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் 2019-21 சுற்று சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
உலகின் முன்னணி கிரிக்கெட் வலைத்தளங்களில் ஒன்றான ஈஎஸ்பிஎன் கிரிகின்ஃபோ, போட்டி முழுவதும் ஒவ்வொரு வீரரின் திறமையை அடிப்படையாகக் கொண்டு உலக டெஸ்ட் அணி குழாமை சமீபத்தில் அறிவித்தது.
இலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணாரத்ன, இஎஸ்பிஎன் கிரிகின்போ பெயரிடப்பட்ட 2019-21 ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பிற்கான 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார்.
10 போட்டிகளில் விளையாடியுள்ள திமுத், 55.50 சராசரியில் மொத்தமாக 999 ரன்கள் எடுத்துள்ளார்.இலங்கை ரசிகர்கள் வெற்றிக்காக ஏங்கி நிற்கும் இந்த நேரத்தில் இந்த அறிவித்தல் ஒரு சிறு மகிழ்ச்சியை அளித்துள்ளது
Comments powered by CComment