இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் (எல்பிஎல்) தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
1990 களில் இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்த சேனநாயக்க, இலங்கைக்காக ஏழு ஒருநாள் மற்றும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 58 வயதான இவர் இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் அணி மேலாளராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.
எல்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது சீசன் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை ஹம்பாந்தோட்டாவின் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Comments powered by CComment