இம்முறை IPL தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளன.
இதில் அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகளும், அதே தினத்தன்று துபாயில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கடைசி லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கெபிடல்ஸ் அணிகளும் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், IPL வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி, இரண்டு போட்டிகளும் ஒக்டோபர் 8ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு லீக் போட்டிகளின்போது அணிகளின் சராசரி ஓட்டவேகம் முக்கியமானதாகப் பார்க்கப்படும். குறுகிய ஓவருக்குள் இத்தனை ஓட்டங்கள் அடித்தாக வேண்டும் என்ற நெருக்கடி கடைசிப் போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்படும்.எனவே, இந்த அழுத்தத்தையும், பதற்றத்தைத் தவிர்க்கவே கடைசி இரண்டு லீக் போட்டிகளையும் ஒரே நேரத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments powered by CComment