ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சு பிரிவில்
இலங்கை சுழல் நட்சத்திரம் வணிந்து ஹசரங்க முதலிடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வணிந்து ஹசரங்க 776 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர் 2021ஆம் ஆண்டு அதிக வீக்கெட்டுக்களை வீழ்த்திய பட்டியலில் முதலிடத்திலும் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியினூடான போட்டியில் ஹாட்ரிக்(Hat-Trick) சாதனை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment