டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக
விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறினார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறினார்.
டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை எடுத்த அவர், ஹர்பஜன் சிங்கை முந்தினார்.
ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Comments powered by CComment