சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் முகமது ஹபீஸ். இவர் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6614 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 134 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அதேபோல், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2440 ரன்களும், 61 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும், 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3652 ரன்களும், 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது ஹபீஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Comments powered by CComment