கோவிட் பெருந்தொற்றுத் தொடங்கிய சீனாவின் பீஜிங் நகரில் 2022ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
பீஜிங்கின் தேசிய மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற Beijing2022 ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் அதிபர் ஜி ஜின்பிங்கும், ஒலிம்பிக் போட்டிகளின் தலைவரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டார்கள்.
2022 Winter Olympic
பெருந்தோற்றுக்கான பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஆரம்பமான ஆரம்பவிழாவில், சீனாவின் தேசியக் கொடி, மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போட்டிகளில் கலந்து கொள்ளும் 91 நாடுகளின் வீரர்கள் அணிவகுத்து வந்ததைத் தொடர்ந்து ஆரம்பவிழா நிகழ்வுகள் தொடங்கின.
Comments powered by CComment