இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுபர் ஓவர் முறையில்
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஜோஷ் இங்கிலீஸ் 5 பௌண்டரிகள் அடங்கலாக 32 பந்துகளுக்கு 48 ஓட்டங்களை எடுக்க, ஆரோன் பின்ச் 25 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு போட்டியின் இறுதி ஓவரில் வெற்றிக்காக 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனாலும், 18 ஓட்டங்களை இறுதி ஓவரில் பெற்றுக் கொண்ட இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்கள் பெற்று போட்டியினை சமநிலை செய்தது.
போட்டி சமநிலையானதை அடுத்து சுபர் ஓவர் வழங்கப்பட்டிருந்தது. சுபர் ஓவரில் சிறப்பான பந்துவீச்சுடன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 6 ஓட்டங்களை அடைந்து கொண்ட அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது. போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் தெரிவானார். இந்த T20 தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) கென்பராவில் நடைபெறுகின்றது.
Comments powered by CComment