ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
அடுத்துவந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர்.
பாபர் அசாம் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னில் வெளியேறினார். ஆனால், அடுத்துவந்த முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக நவாஸ் தெரிவானார்.
Comments powered by CComment