ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுசந்திகா மகளிர் கிரிக்கெட் ஆலோசகரானார்.
சமகால மற்றும் எதிர்கால மகளிர் கிரிக்கெட் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் தனது மன உறுதியையும் விளையாட்டுத்துறையில் தான் கொண்டிருந்த அர்ப்பணிப்புத் தன்மையையும் இலங்கையின் அதிசிறந்த முன்னாள் மெய்வல்லுநர் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க பகிர்ந்துகொள்வார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.
இந்த நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட சுசந்திகா ஜயசிங்க, "இந்த புதிய சவாலை ஏற்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது இளம் பெண் விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் ஈடுபடவும், சவால்களை சமாளிக்கவும், எதிர்காலத்தில் அவர்கள் தகுதியான 'நட்சத்திரங்களாக' மாற்றவும் தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது"
எனக் குறிப்பிட்டார்.
பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சுசந்திகாவை மகளிர் கிரிக்கெட் மேம்பாட்டு ஆலோசகராக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

Comments powered by CComment