இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.
இருபதுக்கு20 கிரிக்கெட் உலகக் கிண்ணம், மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணம் என்று இரண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவராக தோனி திகழ்ந்தார்.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட அவர், தற்போது ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறும் அறிவித்தலை விடுத்துள்ளார். அவருக்கு தற்போது 39 வயதாகும்.
Comments powered by CComment