counter create hit நவம்பர் மாத ராசி பலன்கள்-2021

நவம்பர் மாத ராசி பலன்கள்-2021

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நவம்பர் மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

 மேஷம் : (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தன ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
நளினமாக பேசும் மேஷராசியினரே இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும்.
தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.
குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.
பெண்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.
மாணவர்கள் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அஸ்வினி:
தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
பரணி:
குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.
கார்த்திகை 1:
எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

 

 ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அனுபவ ஞானத்தைக் கொண்டு செயலாற்றி காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் ரிஷப ராசியினரே இந்த மாதம் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பண வரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம்.
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு அறிவு திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

கார்த்திகை 2, 3, 4:
தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
ரோகிணி:
எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.
மிருக சிரீஷம் 1, 2:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

 

  மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மிதுன ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். காரிய வெற்றி உண்டாகும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும்.
குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.
பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்விக்கான பணிக ளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

மிருக சிரீஷம் 3, 4:
வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். வார தொடக்கத்தில் மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
திருவாதிரை:
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3:
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

 

 கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
கடின உழைப்பால் வளர்ச்சி அடையும் கடக ராசியினரே இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக்கொள்வது நன்மை தரும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது.
பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண்பேச்சை குறைப்பது நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

புனர் பூசம் 4:
தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரம் ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பூசம்:
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள்.
ஆயில்யம்:
காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

பரிகாரம் : எலுமிச்சம் பழ சாரை பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்து வர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

 

   சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடும் சிம்ம ராசியினரே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது.
தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப் பவர்கள் எதையும் குழப்பத்துட னேயே செய்ய நேரிடும். சக ஊழியர் களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதி கரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.
பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.

மகம்:
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும்.
பூரம்:
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.
உத்திரம் 1:
உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம் : காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும். “எருக்க மலரை” சிவனுக்கு மாத சிவராத்திரி அன்று அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

 

 
கன்னி:  (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
மற்றவர்களுக்கு மதிப்பும், கவுரவமும் தரக்கூடிய கன்னி ராசியினரே இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனகுழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். போட்டிகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை உண்டாகும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை.
குடும்பத்தில் நிம்மதி குறையும். பேசாமல் சென்றால் கூட வீண் பிரச்சனை களை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துசெல்வது நல்லது. பிள்ளைகளிடம் கவனமாக இருப்பது நன்மை தரும்.
பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4:
பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
அஸ்தம்:
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.
சித்திரை 1, 2:
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12

 

  துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சூரியன் - தன ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
திட்டங்களை தீட்டுவதில் கெட்டிக் காரரான துலாராசியினரே நீங்கள் அதை செயல்படுத்துவதிலும் வல்லவர். இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

சித்திரை 3, 4:
சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.
சுவாதி:
புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். சந்திரன் சஞ்சாரம் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3:
தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கி வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

 

   விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
எப்போதும் விழிப்புடன் இருக்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். இந்த மாதம் எதிர்பார்த்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.
மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விசாகம் 4:
குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.
அனுஷம்:
மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்
கேட்டை:
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

 

  தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன ஸ்தானத்தில் குரு, சனி - ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அடுத்தவர் ஆலோசனை கேட்டு செயல்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் சிந்தித்து செயலாற்றும் தனுசு ராசியினரே இந்தமாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.

மூலம்:
அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.
பூராடம்:
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
உத்திராடம் 1:
சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம் : வியாழன்தோறும் ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

 

 மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு, சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எல்லோரிடமும் இதமான அணுகு முறையும், மனஉறுதியும் மிக்க மகர ராசியினரே இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத துன்பமும், தொல்லையும் உண்டாகும். அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்கியம் கெடலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவ பூர்வ மான அறிவு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் எளிதாக பணி களை செய்து முடிப்பார்கள். செயல் திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.
பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும்.

உத்திராடம் 2, 3, 4:
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
திருவோணம்:
எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் 1,2:
வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.

பரிகாரம் : சனிதோறும் ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

 

 கும்பம் :(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
கடின உழைப்பும், தொழில் உயர்வும் பெற்ற கும்பராசியினரே நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனு சரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும்.
குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும்.
பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.
மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 3, 4:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்
சதயம்:
அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.
பூரட்டாதி 1, 2, 3:
பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்

பரிகாரம் : பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

 

 மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எந்த சூழ்நிலையிலும் கலங்காத மனம் கொண்ட மீனராசியினரே நீங்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணர். இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.
தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
பெண்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி 4:
தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்
உத்திரட்டாதி:
குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரேவதி:
பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம் : வியாழகிழமைதோறும் நவக்கிரகங்களை 9 முறை வலம் வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

 

 - 4தமிழ்மீடியாவிற்காக : ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.