counter create hit இராகு - கேது பெயர்ச்சி (2022) பலன்கள் - விருச்சிகம்

இராகு - கேது பெயர்ச்சி (2022) பலன்கள் - விருச்சிகம்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: ராஹூ பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: விருச்சிக ராசி அன்பர்களே !இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கப் பெற்று சமூகத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல ஞானம் உண்டாகும்.

குடும்பத்தில் தாயின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாய கிடைக்கும். புத்திரர்கள் தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று குடும்பத்திற்கு நற்பெயர் பெற்றுத் தருவார்கள். சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். அதனால் ஆதாயமே. நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள். புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும்.

தொழிலதிபர்கள் சுக சவுகரிய வாழ்க்கையை பெறும் வகையில் தொழில் அமையும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பெற்றோர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வீட்டில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தந்தையின் தொழில் புரிபவர்கள் அவரைப்பின்பற்றி புதிய மிடுக்கான தோற்றம் உண்டாகும்.

பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.
அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது. நண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நண்பர்களுடான பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு வைப்பது நலம் தரும். சாலைகளில் வாகனங்க்ளில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அனுஷம்:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கேட்டை:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்

அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான விரிவான இராகு கேது பெயர்ச்சிப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula