மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
உடன் இருப்பவர்களை உயிரினும் மேலாக காக்கும் குணமுடைய மேஷ ராசி அன்பர்களே, 13-04-2022 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை சுக - ரண ருண ரோக - அஷ்டம ஸ்தானங்களின் மீது விழுகிறது.
தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்சனைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்சனைகள் இருந்திருக்கும். அதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.
தொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். இனி அது மாறும். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும். யாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள். காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரையத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொழில் தொடங்க சூழல் உருவாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம். பொறுமயாக எடுத்துச் சொல்வது நல்லது. நீங்கள் பொறுமையைக் கடைத்தால் உத்யோகஸ்தர்களுக்கு இந்த குருபெயர்ச்சி லாபமானதாகவே இருக்கும்.
பெண்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு குரு உங்கள் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் அந்த பாடம் உங்கள் மனதில் ஆழமாக பதியும். என்றும் மறக்காது. தேர்வில் வெற்றி பெறலாம்.
அரசியல்துறையினருக்கு தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள்.
கலைத்துறையினர் உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கவலை வேண்டாம். இந்த காலகட்டத்தை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இது அமையும்.
நட்சத்திரப்பலன்கள்
அஸ்வினி:
இந்த குருப் பெயர்ச்சியில் உணவு விஷயத்தில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதன்மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக் கூடும். பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும் விலகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும்.
பரணி:
இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவதில் முனையக்கூடும். பணப்புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சனை எதுவும் இராது என்றாலும் பெருந்தொகை கடன் கொடுக்கும்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பது கூடாது.
கிருத்திகை:
இந்த குருப் பெயர்ச்சியில் புதிய முயற்சிகள் எதிலும் அவரசப்பட்டு ஈடுபடாதீர்கள். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து சாதக பாதகங்களை அறிந்த பின்னர் திட்டமிட்டுச் செயல் படுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணங்களின் போது மிகவும் எச்சரிக்கையாய் இருந்து வருவது அவசியம். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படக்கூடிய நிலை உண்டு. நண்பர்களால் சிலர் அனுகூலமடையக்கூடும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வர உங்களுக்கு வர இருக்கும் அவமானங்களைத் தவிர்க்கலாம்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment