ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே,
13-04-2022 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை தைரிய வீரிய - பஞ்சம - களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது.
உங்களின் போராட்டம் அனைத்தும் விதைகளாய் மாறி உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் கால காட்டம் குடும்பத்தில் திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம். உங்களின் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
தொழிலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்குகள் நல்ல முறையில் கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும், அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல லாபத்தைக் குரு பகவான் கொடுப்பார். வண்டி, வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலி ல் இருப்போர் நல்ல வளர்ச்சியைக் காண முடியும்.
உத்யோகஸ்தர்கள் தொலைந்து போன சில ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதை வைத்து உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்டுவார். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து காணப்படும்.
பெண்களுக்கு களத்திர ஸ்தானத்திற்கு குரு வருவதால் கணவன் - மனைவி உறவு பலப்படும். கொடுத்த கடன்கள் ஓரளவிற்கு திருப்பி கிடைக்கும். உடலுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகல் தேவையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும்.
மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைகள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து அதில் பரிசுகளும், கேடயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல் துறையினருக்கு உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள். அது உங்களுக்கு எதிர்கால வாழ்விற்கு வடிகோலாக அமையும். மூத்த அரசியல் வாதிகள் உங்களுக்கு நல் வாக்கு வழங்குவார்கள். உங்களுக்கு மன நிம்மதியை அளிக்கும்.
கலைத்துறையினருக்கு குரு சுக்கிரன் வீட்டைப் பார்ப்பதால் சக கலைஞர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். நாடகக் கலைஞர்களும், மேடைக் கலைஞர்களும் கூட நல்ல உயர்வான நிலையை அடைவார்கள். மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதல்ல.
நட்சத்திரபலன்கள்:
கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் புதிய, சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி அவர்களைத் திருப்தி படுத்துவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும். கோபத்தைக் கட்டுபடுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம். பொதுவாக உடல் நலத்தில் ஓரளவு அக்கறை செலுத்தி வருவது நல்லது. புதிய திட்டங்களைச் செயல் படுத்தும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நன்மை தரும்.
ரோகிணி:
இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும். குழப்பத்துக்கு இடங்கொடுக்காதீர்கள். அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளைச் சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களைச் சரியாகப் பரிசோதனைச் செய்து, வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும். பிற்காலத்தில் தொல்லை நேராமல் தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் திருப்திகரமான போக்கு தென்படும்.
மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்:
இந்த பெயர்ச்சியில் சகோதர வழியில் செலவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் கைகூடி வரும். இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து வரும். கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். மணமான பெண்கலில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படக்கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்பாராத ஊதிய உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹாலட்சுமிக்கு மல்லிகை மலர் அர்பணித்து வர வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள் குறையும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment