ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, 22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், பார்க்கிறார்.
பலன்: எந்த நிலையிலும் தன்னம்பிக்கை யுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். இந்த குரு பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.
தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.
குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும்.
கலைத்துறையினர் எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது.
அரசியல்துறையினர் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். எனினும் திறமையாக செயல்படுவீர்கள்.
மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.
கார்த்திகை:
இந்த குரு பெயர்ச்சியால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.
ரோகினி:
இந்த குரு பெயர்ச்சியால் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
மிருகசீரிஷம்:
இந்த குரு பெயர்ச்சியால் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.
பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோயில் வைத்திய நாதஸ்வாமி, முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment