மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் உடைய மிதுன ராசி அன்பர்களே!
13-04-2022 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை தன வாக்கு குடும்ப - சுக - ரண ருண ரோக ஸ்தானங்களின் மீது விழுகிறது.
தனம், குடும்ப, வாக்கு ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். நிம்மதியான தூக்கம் வரும். விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக் கொள்ளலாம். சில பாக்கியங்கள் கிடைக்க வில்லையே என்று நீங்கள் வருத்தப் படலாம். அது இந்த குரு பெயர்ச்சிக்கு பின்பு சரியாகும்.
எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதர்வாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.
தொழிலில் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உங்களின் தொழிலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும்.
பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.
மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில் பயில வாய்ப்புகளும் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு உங்களைப்பற்றி குறைகூறியவர்கள் உங்களை புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். இதனால் உங்களின் மனம் நிம்மதி அடையும்.
கலைத்துறையினருக்கு கதை இலக்கியம் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள். இதனால் உங்கள் புகழ் உயரும்.
நட்சத்திரப் பலன்கள்:
மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியில் எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.
திருவாதிரை:
இந்த குரு பெயர்ச்சியில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும். நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்:
இந்த குரு பெயர்ச்சியின் மூலமாக உத்தியோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.
பரிகாரம்: புதன் கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட பெரும் நோய்களினால் பாதிக்காமல் காக்கப்படுவீர்கள்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment