கடகம்: (புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ) தன்னைச் சுற்றி உள்ளவர்களின் துன்பங்களை தன்னுடையதாகக் கருதும் கடக ராசி அன்பர்களே,
13-04-2022 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை ராசி - தைரிய வீரிய - பஞ்சம ஸ்தானங்களின் மீது விழுகிறது.
மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எதிர்பார்த்திருந்ததை விட சிறப்பான வாழ்க்கை அமையும். உங்கள் மனம் தெளிவடையும். தோற்றப் பொலிவு உண்டாகும். உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.
தொழிலைப் பொறுத்த வரை மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். நேரம், தைரியம், வாக்கு இவை அனைத்தும் உங்கள் வெற்றிக்கு தோள் கொடுக்கும். எனவே இந்த குரு பெயர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், பணி இடமாற்றமமும் உங்களைத் தேடி வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகளும், சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும். வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளையும் நீங்கள் படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும்.
அரசியல்துறையினர் வார்த்தைகளை சரியான முறையில் பிரயோகப்படுத்துவது அவசியம். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்தாலே சில பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பாராமல் சில முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இதனால் உங்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும்.
நட்சத்திரப் பலன்கள்
புனர்பூசம் 4 ஆம் பாதம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பிரிவினருக்குமே ஏற்றமும் இறக்கமும் கூடிய நிலையே இருந்து வரும். எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை எதிர்பார்க்க முடியாது எனபதால் தொழில் , வியாபாரம் போன்ற எதுவாயினும் பெரும் ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்ப்பதற்கில்லை. குடும்ப நிலையிலும் நிம்மதி குறைந்து காணப்படலாம். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கைகூடும். பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மன்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும்காணலாம். தெய்வபலம் துணை நிற்கும்.
பூசம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிதானமான மனப்போக்கு தேவை. சகோதர வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மன அமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும் நிலை உள்ளாதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருந்துவாருங்கள். பெரும் பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. இறைவழிபாட்டில் மனத்தைச் செலுத்தி பொறுமையுடன் செயல் பட்டு வருவதே இப்போதைக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது உத்தமம்.
ஆயில்யம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலைஉள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது. என்றாலும் எந்த முயற்சியில் ஈடுபடும் போதும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து திட்டமிட்டு அதன் பிறகே செயல்படத் தொடங்குவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாள்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்ற நிலை உள்ளதால் அவர்களிடம் கனிவாகநடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. கண்ணில் சிலருக்கு கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமாகும். சிலருக்கு திடீர் தனவரவு உண்டாக வாய்ப்புண்டு, வாகனப் பழுது பார்ப்புச் செலவு சிலருக்கு ஏற்படக்கூடும். நெருப்பு அருகில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்பாளுக்கு மல்லிகை மலர் சாற்றி வழிபட பூர்வீக சொத்துக்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment