சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம் : ஆளுமைத் திறன் அதிகம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே ! 22-04-2023 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக ராசியில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், பார்க்கிறார்.
பலன்: இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர். இந்த குரு பெயர்ச்சியால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பீர்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும்.
பெண்கள் எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியல் துறையினருக்கு சிறிய வேலையையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகம்:
இந்த குரு பெயர்ச்சியால் பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும்.
பூரம்:
இந்த குரு பெயர்ச்சியால் எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
உத்திரம்:
இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment