கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம் :
உறவுகளைப் பெரிதென மதிக்கும் குணமுடைய கன்னிராசி அன்பர்களே ! 13-04-2022 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை லாப - ராசி - தைரிய வீரிய ஸ்தானங்களின் மீது விழுகிறது.
குடும்பத்திலிருப்பவர்கள் அனைவரும் உங்கள் பேச்சுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது அதற்கான பாக்கியம் கிட்டும். வாழ்வில் அவரவர் வயதிற்கு ஏற்ப நன்மைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
தொழிலில் தந்தையார் தொழிலை கவனித்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை தந்தையின் ஆலோசனையின்படி கேட்டு முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். வீண் செலவுகளைத் தவிருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைப்பதற்காக அதிகமான வேலைப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் சென்றுவர வேண்டியிருக்கும்.
பெண்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிக வேலைப்பளு அதிகமாக இருக்கும். தந்தையாரின் அன்பு அதிகரிக்கும். மாணவர்களில் சங்கீதம் பயிலும் மாணவர்கள் நல்ல ஞானம் கிடைக்கும். நண்பர்களுடன் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு மக்களிடையையும், தொண்டர்களிடையையும், நல்ல செல்வாக்கு உயரும். கட்சிப் பணிகளில் புதிய முயற்சிகள் கை கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய படத் தயாரிப்பாளர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு நல்ல லாபத்தை பெறலாம். அமோக வாய்ப்புகள் வரும்.
உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனத்தில் இருந்து வந்த தேவையற்ற வீண் குழப்பங்கள் அகலும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போதும் நெருப்பினைப் பிரயோகப்படுத்தும் போதும் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் நல்ல மாறுதல்களை உணர்வீர்கள். வெளிநாடு பயணம் செல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
ஹஸ்தம்:
இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்பார்க்காத பணி இட மாற்றம் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஈடுபடும் போதும் நேர்மறை எண்ணங்களோடு ஈடுபடுவது நல்லது. கூடுமானவரை சோம்பேறிதனத்தை விடுவது நன்மை தரும். பொருளாதார நிலை மேலோங்கும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சித்திரை 1, 2ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் குடும்ப நிம்மதியில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் வழியில் சில கவலைகள் நேரலாம். பொருளாதார நிலை மேலோங்கும். நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவீர்கள். தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது நன்மை தரும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். வியாபாரிகள் அதிக அள்வில் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்யவும். தள்ள்ப் போய் கொண்டிருந்த திருமணம் கைகூடும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் விஷ்ணுவிற்கு மல்லிகை மலர் அர்ப்பணித்து வணங்க சகோதரர்களிடம் இருக்கும் மனசங்கடங்கள் தீரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment