துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் :
உடனிருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் குணமுடைய துலாராசி நேயர்களே !
13-04-2022 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை தொழில் - அயன சயன போக - தன வாக்கு குடும்ப ஸ்தானங்களின் மீது விழுகிறது.
குடும்பத்தில் பழைய கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும், அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். உங்கள் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வளவு காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள் கூட இப்போது ஓடிஆடி செய்வதற்கு முன்னேற்றம் ஏற்படும்.
தொழிலில் உங்கள் உடல் நிலையால் சில காரியங்களைத் தள்ளிப்போட்டு வந்தீர்கள். இனி அந்த நிலை இருக்காது. சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். இதனால் தொழிலும் சூடு பிடிக்கும். லாபமடைவீர்கள். வீண் அலைச்சல் இருந்து கொண்டே இருந்த நிலை மாறும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலை இடத்தில் ஏற்பட்ட சில அவமானக் குறைவால் வேலையை விட்டவர்கள் இப்போது வேலையில் சேர்ந்து தொடருவார்கள்.
பெண்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று இருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிப்பவர்களின் மனக்கஷ்டங்கள் நீங்குவதன் மூலம் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.
அரசியல்துறையினருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். இதன் மூலம் நீங்கள் நிம்மதியாக செயல்படமுடியும்.
கலைத்துறையினருக்கு வெளியூர் பயணங்கள் அதிகம் இருந்தாலும் அவை அனைத்தும் உங்களின் முன்னேற்றத்திற்காகவே. அதிக உழைப்பை தர வேண்டியிருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
சித்திரை 3, 4ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
ஸ்வாதி:
இந்த குருப் பெயர்ச்சியில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹாலட்சுமிக்கு தாமரை மலர் அர்ப்பணிக்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment