விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை : வார்த்தைகளால் மற்றவர்களைக் கவரும் விருச்சிக ராசி அன்பர்களே,
13-04-2022 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை பாக்கிய - லாப - ராசி ஸ்தானங்களின் மீது விழுகிறது.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை சில தடைகளுக்குப் பிறகு வாங்குவீர்கள். சிறு தடை வருகிறதென மனம் கலங்க வேண்டாம். தேவையில்லாமல் கருத்து சொல்வதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. மன சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது.
தொழில் - வியாபாரம் செய்பவர்கள் தேவையில்லாமல் உங்கள் தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய ஆட்களை நம்பி அதிக முதலீடு செய்ய வேண்டாம். இருப்புக்கு அதிகமாக பொருள் தருவதாக வாக்கு கொடுப்பதையும் தவிர்த்தல் நலம். நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் எந்த வித நஷ்டமும் இல்லாமல் இருக்கும்.
உத்யோகஸ்தர்கள் முக்கிய விஷயங்களில் அனைவரிடமும் கருத்து கேட்டாலும் தீர ஆலோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு வெற்றியைத் தரும்.
பெண்களில் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் இருக்கும்.
மாணவர்களுக்கு எதிர்பாலினத்தாரால் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். தந்தையின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் சிறந்த மாணவராக திகழலாம்.
அரசியல் துறையினருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் புகழ்ச்சிக்கு செவி சாய்க்காமல் இருப்பது நல்லது.
கலைத் துறையினருக்கு உங்கள் குடும்பத்தார் பெருமைபடும் அளவிற்கு பெரிய ஒப்பந்தங்கள் உங்களைச் தேடி வரும். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற குரு பகவான் துணை நிற்பார்.
நட்சத்திரப்பலன்:
விசாகம் 4ம் பாதம்:
இந்த குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும்.
அனுஷம்:
இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திர வழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும்.
கேட்டை:
இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு அரளி மாலை சாற்றி வழிபட மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment