counter create hit 2023 புத்தாண்டுப் பலன்கள் !

2023 புத்தாண்டுப் பலன்கள் !

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் - 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நக்ஷத்ரமான அஸ்வினி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. புத்தாண்டு உபய நில லக்னமான கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மேஷ ராசி அஸ்வினி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும் - ஐந்தாமிடத்தில் சுக்கிரன் - சனி கிரககூட்டணி அமைந்து இருப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

வருடம் பிறக்கும் போது கிரகங்களுடைய பாதசாரங்கள்
லக்னம் - ஹஸ்தம் 2ல் - சந்திரன் சாரம்
சூரியன் - பூராடம் 1ல் - சுக்கிர சாரம்
சந்திரன் - அஸ்வினி 2ல் - கேது சாரம்
செவ்வாய்(வ) - ரோகினி 3ல் - சந்திர சாரம்
புதன்(வ) - மூலம் 3ல் - கேது சாரம்
குரு - உத்திரட்டாதி 3ல் - சுய சாரம்
சுக்கிரன் - உத்திராடம் 2ல் - சூர்ய சாரம்
சனி - திருவோணம் 4ல் - சந்திர சாரம்
ராகு - பரணி 3ல் - சுக்கிரன் சாரம்
கேது - விசாகம் 1ல் - குரு சாரம்

பொது பலன்கள்:
நாடு:
வெளிநாட்டின் வருவாய் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி பெறும். முக்க்ய பதவிகளில் இருப்பவர்கள் நாடு முன்னேற்றமடைய பாடுபடுவார்கள். உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும். புதிய நவீன ஏவுகனைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும். பலம் வாய்ந்த நாடுகளில் நமது நாட்டிற்கும் தனித்தன்மை ஏற்படும். மழையின் அளவு ஓரளவு இருக்கும். ஆறு, குளம், கண்மாய், அணைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வளம் பெறும். கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும். மாணவ மணிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டில் நமது நாட்டினை சார்ந்தவர்கள் சாதனைகள் பெறுவார்கள். அமேரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியாஆகிய நாடுகளில் பூமி அதிரும்.

 

 

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்கள், தொடர்ச்சியாக அடுத்து  பிரசுரமாகும். உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula