counter create hit ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள்

ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசார்வரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதிம் பின்னிரவு - ஸ்ரீப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 01ம் தேதி முன்னிரவு - 14.04.2021 - அன்றைய தினம் சுக்ல பக்ஷ த்வீதியையும் - பரணி நக்ஷத்ரமும் - ப்ரீத்தி நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் - மகர லக்னமும் - மேஷ நவாம்ச லக்னமும் - மேஷ சந்திரா லக்னமும் - கன்னியா நவாம்ச சந்திரா லக்னமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 01.48க்கு (உதயாதி நாழிகை: 49:11க்கு) மகர லக்னத்தில் ஸ்ரீப்லவ வருஷம் பிறக்கிறது.

 

கிரக பாதசார விபரங்கள்:
லக்னம் - திருவோணம் 1ம் பாதம் - சந்திர சாரம்
சூர்யன் - அஸ்வினி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - பரணி 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்
செவ்வாய் - ம்ருகசீரிஷம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
புதன் - அஸ்வினி 2ம் பாதம் - கேது சாரம்
குரு - அவிட்டம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம் - அதிசாரம்
சுக்ரன் - அஸ்வினி 1ம் பாதம் - கேது சாரம்
சனி - திருவோணம் 1ம் பாதம் - சனி சாரம்
ராஹு - ரோகினி 3ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - கேட்டை 1ம் பாதம் - புதன் சாரம்

சுக்கிரன் தசை இருப்பு: 10 வருஷம் - 03 மாதம் - 05 நாள்

ப்லவ வருஷத்தின் நவநாயகர்கள்:
ராஜா - செவ்வாய்
மந்திரி - புதன்
அர்க்காதிபதி - செவ்வாய்
மேகாதிபதி - செவ்வாய்
ஸஸ்யாதிபதி - சுக்கிரன்
சேனாதிபதி - செவ்வாய்
இரஸாதிபதி - சூர்யன்
தான்யாதிபதி - குரு
நீரஸாதிபதி - சுக்கிரன்
பசுநாயகர் - கோபாலன்

 

ப்லவ வருஷ வெண்பா:
பிலவத்தில் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதி துன்பம் தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளான்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்
- இடைக்காடர் வாக்கு

பொது பலன்கள்:
இந்த பிலவ ஆண்டு வெண்பாவின் மழை குறைவாக இருப்பதும், மழை நீர் சேமிப்பு இன்றி கடலில் கலக்க நேரும். மேகாதிபதி செவ்வாய் சுக்கிரன் வீட்டிலும் சுக்கிரன் செவ்வாய் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் பல புதிய வியாதிகள் உற்பத்தி ஆகும். சித்திரை மீ வருடபிறப்பு புதன்கிழமை வருவதாலும் - ஆடி மீ.5ம் தேதி புதன்கிழமை வருவதாலும் நல்ல மழை பொழிவு உண்டு. மத்திய மாநில அரசுகள் பல புதிய திட்டங்களை நல்ல செயல்படுத்த நேரும். புதிய வைரஸ் நோய்களால் கால்நடைகள் கடுமையாக பாதிக்க நேரும். ஆலைகளில் விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கும். மருத்துவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

அயல்நாட்டில் புழுதி காற்று சூறாவளி மற்றும் பலமாக தாக்க நேரும். தான்யாதிபதி குரு 2-ஆம் ஸ்தானத்தில் இருப்பதால் அனைத்து வியாபாரிகளுக்கும் ஆன்லைன் படிதான் வியாபாரம் செய்ய நேரும். மளிகை - காய்கறி- கனிவகை-தான்யம் போன்றவை யாவும் விலை அதிகரிக்கும். இந்த பிலவ ஆண்டு அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தும்.

அயல்நாடுகள் மூலமாக முக்கியமாக ஜப்பான் தென்கொரியா அமெரிக்கா ஒத்துழைப்புடன் மத்திய அரசாங்கம் பல முதலீடுகளை ஏற்க நேரும். கள்ளர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். வழக்கறிஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் உடனுக்குடன் முடிக்க நேரும். புதிய பல நோய்கள் ஏற்பட்டு மக்களுக்கு கடுமையாக பாதிக்க நேரும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

ராஜா செவ்வாய் பலன்:
குறைந்த அளவு மழை - அதிகமான வெப்பம் - தீயினால் ஆபத்து - தேவையற்ற போர் பதற்றம் - வாகன விபத்துகள் ஏற்படலாம். பூமி மனை வீடு அதை சார்ந்த பொருட்கள் அதிக அளவு விலை ஏறும்.

மந்திரி புதன் பலன்:
புயலால் மட்டும் மழை உண்டு. பயிர் விளைச்சல் பெருகும். பாப சிந்தனை அதிகரிக்கும்.

அர்க்காதிபதி செவ்வாய் பலன்:
காற்று அதிகமாக வீசும். மேகங்கள் கலையும். மழை சொற்பம். விலைவாசி கடும் ஏற்றம்.

மேகாதிபதி செவ்வாய் பலன்:
அதிகமான காற்று வீசும். புயல் ஏற்படும். சிகப்பு தான்யங்கள் அதிகரிக்கும்.

ஸஸ்யாதிபதி சுக்கிரன் பலன்:
புஷ்ப விளைச்சல் அதிகமாகும். வாசனை வஸ்துக்கள் அதிகரித்தலுடன் - அதிக விற்பனையும் உண்டாம்.

சேனாதிபதி செவ்வாய் பலன்:
தீ விபத்துக்கள் உண்டு. எல்லைகளில் போர் பதற்றம். மக்கள் போராட்டம் அதிகமாகும்.

இரஸாதிபதி சூர்யன் பலன்:
நூதனமான முறையில் எண்ணை உற்பத்தி. எண்ணை விலை குறையும்.

தான்யாதிபதி குரு பலன்:
தான்யங்கள் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி. அளவான மழையால் நீர் நிலைகள் நிரம்புதல்.

நீரஸாதிபதி சுக்கிரன் பலன்:
திடப்பொருள்கள் உற்பத்தி பெருகும். பட்டு ஜவுளி உற்பத்தி அதிகம்.

மகர சங்கராந்தி பலன்
இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தை மாதம் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். பெண்களுக்கு சந்தோஷம்.

கிரக மாற்றங்கள்:
இந்தாண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
இந்தாண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
இந்தாண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் வ்ருச்சிக ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்கள், தொடர்ச்சியாக அடுத்து  பிரசுரமாகும். உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula