கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்
கும்ப ராசியினரே இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள் : மீனம்
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மீன ராசியினரே இந்த ஆண்டு வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும்.
ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள் : மேஷம்
மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
மேஷராசியினரே இந்த ஆண்டு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள் : மிதுனம்
மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
மிதுன ராசியினரே இந்த ஆண்டு வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.
ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள்
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசார்வரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதிம் பின்னிரவு - ஸ்ரீப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 01ம் தேதி முன்னிரவு - 14.04.2021 - அன்றைய தினம் சுக்ல பக்ஷ த்வீதியையும் - பரணி நக்ஷத்ரமும் - ப்ரீத்தி நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் - மகர லக்னமும் - மேஷ நவாம்ச லக்னமும் - மேஷ சந்திரா லக்னமும் - கன்னியா நவாம்ச சந்திரா லக்னமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 01.48க்கு (உதயாதி நாழிகை: 49:11க்கு) மகர லக்னத்தில் ஸ்ரீப்லவ வருஷம் பிறக்கிறது.
ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள் : ரிஷபம்
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
ரிஷப ராசியினரே ! இந்த ஆண்டு தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும்.
ப்லவ தமிழ் புத்தாண்டு பலன்கள் : கடகம்
கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கடக ராசியினரே இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.